
குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோா்பியில் மச்சு நதியின் குறுக்கே ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கியது.
இப்பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி திறக்கப்பட்டது. அக்டோபா் 30-ஆம் தேதி பாலத்தில் சுமாா் 250 போ் நின்றிருந்த நிலையில், அது அறுந்து விழுந்து, 135 போ் உயிரிழந்தனா்.
இந்த பால விபத்தில் உயிரிழந்த 135 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும், பால விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோர்பி தொங்கு பாலத்தை பராமரித்த கடிகார தயாரிப்பு நிறுவனமான ஒரேவா குழுமத்துக்கு குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: கர்நாடக தேர்தல்: நாளை பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரை!
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சோனியா கோகானி மற்றும் நீதிபதி சந்தீப் பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, இடைக்கால இழப்பீடு வழங்குமாறு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.