நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கர்நாடக தேர்தல்: நாளை பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரை!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை பெல்லாரியில் நடைபெறும் பொது பேரணியில் உரையாற்ற உள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :22 பிப்ரவரி 2023, 9:46 am

DIN

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை பெல்லாரியில் நடைபெறும் பொது பேரணியில் உரையாற்ற உள்ளார். மேலும் மாநில பாஜக தலைவர்களுடன் முக்கிய சந்திப்பையும் அவர் நிகழ்த்த உள்ளார். 

அமித் ஷா நாளை மதியம் 12.50 மணிக்கு ஹுப்பள்ளி விமான நிலையத்தைச் சென்றடைவார். பெல்லாரியில்  இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 1.25 மணிக்கு சந்தூருக்கு வரும் ஷா மதியம் 1.30-க்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். 

பேரணி முடிந்ததும், தோரணகல்லுவில் உள்ள தனியார் விடுதிக்குச் சென்று பெல்லாரி, கொப்பல், விஜயநகர், ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். 

இக்கூட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிகள் பங்கேற்கின்றனர். கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய தலைவர்களும் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27-ம் தேதி சிவமொக்கா விமான நிலையத்தைத்  திறந்துவைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.