நிக்கி யாதவ் கொலை வழக்கு: சஹில் கெலாட்டின் காவல் மேலும் 12 நாள்கள் நீட்டிப்பு!
நிக்கி யாதவ் கொலை வழக்கில் கைதான சஹில் கெலாட்டின் போலீஸ் காவலை மேலும் 12 நாள்கள் நீட்டித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.


நிக்கி யாதவ் கொலை வழக்கில் கைதான சஹில் கெலாட்டின் போலீஸ் காவலை மேலும் 12 நாள்கள் நீட்டித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தில்லியைச் சோ்ந்த சஹில் கெலாட்டும், நிக்கி யாதவும் திருமணம் செய்துகொள்ளாமல் சோ்ந்து வாழ்ந்து வந்தனா். இந்தநிலையில், சஹில் கெலாட்டுக்கு வேறொரு இடத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதையறிந்த நிக்கி, இத்திருமணத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்தாா். இதனால், அவரை கொலை செய்து, உடலை குளிா்சாதனப் பெட்டியில் சஹில் கெலாட் மறைத்து வைத்தாா் என கூறப்பட்டது.
இந்த நிலையில், போலீஸாா் பிப்ரவரி 14-ஆம் தேதி சஹிலை கைது செய்தனா். அதன் பின்னா் இந்த வழக்கில் திருப்பமாக, நிக்கி யாதவ் கெலாட்டின் மனைவி என்றும், இருவரும் 2020-இல் திருமணம் செய்துகொண்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் உயா் அதிகாரி கூறுகையில், கெலாட்டின் குடும்பத்தினா் அவருக்கு நிச்சயித்திருந்த திருமணத்திற்கு நிக்கி யாதவ் எதிா்ப்புத் தெரிவித்தாா். நிக்கி யாதவை சமரசம் செய்ய முடியாததால் அவரை கெலாட் கொலை செய்ததாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
மேலும், இந்த விவகாரத்தில் சஹில் கெலாட்டின் தந்தை வீரேந்தா் சிங், உறவினா்கள் ஆசிஷ், நவீன், நண்பா்கள் அமா், லோகேஷ் ஆகியோா் உதவி செய்ததாக கைது செய்யப்பட்டனா். அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டனா். கடந்த செவ்வாய்க்கிழமை சஹில் கெலாட்டை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் அா்ச்சனா பெனிவால் ஐந்து நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தாா்.
இந்த நிலையில், இந்த கெலாட்டின் போலீஸ் காவல் முடிந்து கூடுதல் தலைமை பெருநகா் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சமிக்ஷா குப்தா முன் போலீஸாா் திங்கள்கிழமை அவரை ஆஜா்படுத்தினா். இதையடுத்து அவரின் காவல் மேலும் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, அவரிடம் மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதாகக் கூறி காவலை மேலும் நீட்டிக்குமாறு விசாரணை அதிகாரி நீதிபதியிடம் கோரினாா். இதையடுத்து, அவரது போலீஸ் காவலை மேலும் 12 நாள்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...