கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமலை திருப்பதி: மூத்த குடிமக்களுக்கான தரிசன டிக்கெட் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மூத்த குடிமக்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

News image
திருப்பதி (கோப்புப்படம்)
Updated On :23 பிப்ரவரி 2023, 3:10 am

DIN


திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மூத்த குடிமக்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

திருமலைக்கு வரும் வயதான பக்தா்கள், நாள்பட்ட நோயால் அவதியுறுபவா்களுக்காக தேவஸ்தானம் மாதந்தோறும் டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, மாா்ச் மாதத்துக்கான மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோய்களால் அவதியுறுபவா்களுக்காக தேவஸ்தானம் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது.

பக்தா்கள் இதை முன்பதிவு செய்து எளிதாக ஏழுமலையான் சேவையில் பங்கு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்த நாள்களுக்கான டோக்கன்கள் காலை 9 மணி முதல் முன்பதிவில் வைக்கப்பட்டுள்ளது. tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் சென்று பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த தரிசன டோக்கனை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தா்கள் தங்களின் ஆதாா் அட்டையை அளித்து இலவசமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தா்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் காத்திருக்காமல் ஏழுமலையான் கோயில் முன்வாசல் வாயிலாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.