அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீட்டு மதிப்பு ரூ.50,000 கோடி சரிவு

அதானி குழும பங்குகளில் எல்ஐசி மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு இந்த 2023ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ரூ.50,000 கோடி சரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீட்டு மதிப்பு ரூ.50,000 கோடி சரிவு
அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீட்டு மதிப்பு ரூ.50,000 கோடி சரிவு

புது தில்லி: அதானி குழும பங்குகளில் எல்ஐசி மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு இந்த 2023ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ரூ.50,000 கோடி சரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை, அதானி குழுமத்தின் பங்குகளுக்கு ஆதரவு பெருகவில்லையெனில், எல்ஐசியின் இந்த நிறுவனத்தின் மீதான முதலீடு மதிப்பு சரிந்து, நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்த ரூ.53,000 கோடியிலிருந்து வெறும் ரூ.3,000 கோடியாக மாறிவிடும் என்கிறார்கள்.

ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்தது அதானி குழுமத்தின் பங்குகள். இதனால், அதானி குழுமத்தில் எல்ஐசி செய்த முதலீடு மதிப்பானது 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கிட்டத்தட்ட ரூ.83,000 கோடியாக இருந்தது. இதுவே, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி ரூ.33,000 கோடியாக சரிந்துள்ளது. 

அதாவது, ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்ட போது, அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமத்தின் மிகப்பெரிய பங்குகளை வாங்கியிருக்கும் எல்ஐசி நிறுவனம், ஜனவரி 30ஆம் தேதிக்குப் பிறகு எந்த விதமான பங்குகளையும் வாங்கவோ விற்கவோ இல்லை என்று கருதப்படுகிறது. இதுவரை அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனப் பங்குகளை எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி 1.28 சதவிகிதம் முதல் 9.14 சதவிகிதம் வரை வாங்கியிருக்கிறது.

அதானி போர்ட்ஸ் பங்குகளில் 9 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. இது ஜனவரியில் 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 11 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுபோல அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 4.23 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்திருக்கும் அதானி குழுமத்தின் பங்குகளில், எல்ஐசியின் முதலீட்டு மதிப்பும் 25,500 கோடியிலிருந்து ரூ.5,200 கோடியாக சரிவடைந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் பங்குச் சந்தைகளில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com