மாத்திரையை அலுமினிய உறையோடு விழுங்கிய முதியவர்: மாற்றி யோசித்த மருத்துவர்கள்

தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் நடத்தப்பட்ட அதிநவீன சிகிச்சையால், அலுமினிய உறையோடு மாத்திரையை விழுங்கிய முதியவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
மாத்திரையை அலுமினிய உறையோடு விழுங்கிய முதியவர்: மாற்றி யோசித்த மருத்துவர்கள்
மாத்திரையை அலுமினிய உறையோடு விழுங்கிய முதியவர்: மாற்றி யோசித்த மருத்துவர்கள்


புது தில்லி: தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் நடத்தப்பட்ட அதிநவீன சிகிச்சையால், அலுமினிய உறையோடு மாத்திரையை விழுங்கிய முதியவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

உணவுக் குழாய்க்குள் சிக்கியிருந்த அலுமினிய உறையோடு மாத்திரையை மிகப் புதுவிதமான என்டோஸ்கோபிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர்.

பேராசிரியர் அனில் அரோரா கூறுகையில், மாத்திரையை பாதுகாக்கும் அலுமினிய உறையோடு கவனிக்காமல் முதியவர் விழுங்கிய நிலையில் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.  உடனடியாக என்டோஸ்கோபி செய்யப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்த அலுமினிய உறை கூர் முனைகளுடன் இருந்தன. அதனை அப்படியே அகற்றினால் உணவுக் குழாயை சேதப்படுத்திவிடும் ஆபத்துஇருந்தது. எனவே, அதனை வயிற்றுப் பகுதிக்குள் கொண்டு வந்து அங்கிருந்து அதனை அகற்றும்படி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிறகு, என்டோஸ்கோபி வழியாக, மாத்திரையை அதனுள் இருந்து வெளியேற்றி, அலுமினியம் உரையை குறுக்கி சின்னதாக்கி, அதன் கூர் முனைகள் மடிக்கப்பட்டன. பிறகு, வாய் வழியாக அது வெளியேற்றப்பட்டது.  மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், சாமர்த்தியமாக செயல்பட்டு மருத்துவர்கள் குழு, முதியவரின் உயிரை மீட்டதோடு, மிகப்பெரிய அறுவை சிகிச்சையை மேற்கொள்வதில் இருந்தும் தடுத்துள்ளனர் என்கிறார்.

இதுவரை மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வு பதிவானதாகத் தெரியவில்லை. இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்போது, எந்தவிதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்த புரிதல்களும் அப்போது இல்லை. ஆனால், நிலைமையை மாற்றி யோசித்ததில் புதிய யுக்தி கிடைத்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com