

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உதவி ஆய்வாளர் உள்பட மூன்று மாவட்ட ரிசர்வ் காவலர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
ஜகர்குண்டா மற்றும் குண்டேட் கிராமங்களுக்கு இடையே இன்று காலை 9 மணியளவில் டிஆர்ஜி குழு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவலர்கள் மூவர் உயிரிழந்தனர்.
தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள ஜாகர்குண்டா காவல் நிலைய எல்லையிலிருந்து இந்த குழு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டியில் உதவி ஆய்வாளர் ராமுராம், காவலர் குஞ்சம் ஜோகா, மற்றும் சைனிக் வஞ்சம் பீமா ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.