வெங்காயம் ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லை. அதே வேளையில் 2022ல் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலங்களில் சுமார் 523.8 மில்லியன் டாலர் மதிப்பிலான பண்டங்கள் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. அதில் வெங்காய விதை ஏற்றுமதிக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் ஏற்றுமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ இல்லை என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2022 டிசம்பரில், வெங்காய ஏற்றுமதி சுமார் 50 சதவீதம் அதிகரித்து 52.1 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான மாதங்களில் ஏற்றுமதி 16.3 சதவீதம் அதிகரித்து 523.8 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது சமீபத்திய ட்விட்டர் பக்க பதிவில், இந்தியாவிலிருந்து எந்த நாட்டிற்கும் வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு தடை இல்லை என்று பதிவிட்டிருந்தார்.
பிப்ரவரி 25 ஆம் தேதி வெங்காய ஏற்றுமதி குறித்து என்சிபி தலைவர் சுப்ரியா சுலே ட்விட்டர் பதிவவை அடுத்து இந்த அறிப்பு வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக 100-க்கும் அதிகமானோரிடம் பணமோசடி! கோவையைச் சோ்ந்த நிறுவனம் மீது புகாா்

சிலிண்டா் தட்டுப்பாடால் ஜாப் ஆா்டா் தொழில் முடக்கம்! நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

மளிகைக் கடை, சுற்றுச்சுவா் இடிக்கப்பட்ட விவகாரம்: பெண் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


