யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்: கருத்துக் கணிப்பு!

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படடுள்ளன. 

News image
Updated On :27 பிப்ரவரி 2023, 4:29 pm

DIN

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படடுள்ளன. 

இதில், திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புப்படி மீண்டும் பாஜக ஆட்சி அமையும் இந்தியா டுடே கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் பாஜக 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21, டிஎம்பி 14, மற்ற கட்சிகள் ப்ரு தொகுதியில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்தில் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது. என்டிடிபி 38 - 48 தொகுதிகளிலும், என்பிஎஃப் 3 - 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் 1 - 2 தொகுதிகளிலும் மற்றவை 5 - 15 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் குறிப்பிட்டுள்ளது.  

மேகாலயாவில் என்.பி.பி. ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. என்பிபி 18 - 24 தொகுதிகளிலும், பாஜக 4 - 8 தொகுதிகளிலும், மற்றவை 17 - 29 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என இந்தியா டுடே தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.