
உத்தரப் பிரதேசத்தின் சுற்றுலாத் துறையில் 2.6 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
சிறந்த 20 துறைகளில் சேர்க்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையில் 397 பரிந்துரைகளை மாநில அரசு பெற்றுள்ளது. இந்த திட்டங்களின் மதிப்பு ரூ.98,193 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று விருந்தோம்பல் துறையில் ரூ.20,722 கோடி மதிப்பிலான 437 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்தாகியுள்ளன.
இதுதொடர்பாக ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் ரூ.7,200 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளால் இது சாத்தியமாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022ஆம் ஆண்டில் 4.10 லட்சம் வெளிநாட்டினர் உள்பட 24.87 கோடி சுற்றுலாப் பயணிகளின் வருகையை மாநிலம் பதிவு செய்துள்ளது. இதன் விளைவாக, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகள் ஜிஐஎஸ் முதலீட்டாளர்களிடமிருந்து பெரும் கவனத்தைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.