வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி சுவாசப் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்றின் காரணமாக தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

News image
Updated On :4 ஜனவரி 2023, 7:13 pm

DIN

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி சுவாசப் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்றின் காரணமாக தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து அம்மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவா் சோனியா காந்தி சுவாசப் பாதையில் தீநுண்மியால் ஏற்பட்டுள்ள நோய் தொற்றுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கங்கா ராம் மருத்துவமனையின் நெஞ்சக நோய் மருத்துவத்திற்கான துறையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்’ எனத் தெரிவிதித்திருந்தது.

செவ்வாய்க்கிழமை மாலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைப்பயணம் தொடங்கிய நிலையில், சோனியா காந்திக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து ராகுல் காந்தியும் பிரியங்காவும் தில்லி திரும்பினா். இதையடுத்து நடைப்பயணம் நிறுத்தப்பட்ட நிலையில், புதன்கிழமை காலை 6 மணியளவில் ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் தொடங்கியது. பிரியங்கா அவரது தாயாருடன் மருத்துவமனையில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.