எப்படி இருக்கிறது ஜோஷிமத்? நேரில் ஆய்வு செய்தார் உத்தரகண்ட் முதல்வர்

சரிந்துகொண்டேயிருக்கும் ஜோஷிமத் பகுதியில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.
எப்படி இருக்கிறது ஜோஷிமத்? நேரில் ஆய்வு செய்தார் உத்தரகண்ட் முதல்வர்
எப்படி இருக்கிறது ஜோஷிமத்? நேரில் ஆய்வு செய்தார் உத்தரகண்ட் முதல்வர்

டேஹ்ராடூன்: சரிந்துகொண்டேயிருக்கும் ஜோஷிமத் நகரத்தில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த புஷ்கர் சிங் தாமி, அனைவருக்கும் அரசு உரிய உதவிகளை செய்யும் என்று உறுதி அளித்துள்ளார்.

வியாழக்கிழமை முதல் அப்பகுதியல் முகாமிட்டுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை நேரில் சந்துத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்த முதல்வர், மக்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சாலைகளில் நடந்து சென்றும், விரிசல் விழுந்த வீடுகளுக்குள் சென்றும் புஷ்கர் தாமி நிலைமையை ஆய்வு செய்தார். மிகவும் அபாயமான பகுதியிலிருக்கும் மக்களை முதலில் பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்துவதே மிக முக்கியப் பணி என்றும் தாமி தெரிவித்துள்ளார்.

நீண்ட கால பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மறுகட்டமைப்பை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.

பிபல்கோடி மற்றும் கௌசார் போன்ற இடங்களுக்கு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் இடமாற்றம் செய்ய தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தாமி அறிவித்தார்.

பூலோக சொர்க்கம் என்று கூறப்படும் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஜோஷிமத் பூமிக்குள் புதையுண்டு வருகிறது. இந்த நகருக்கு அடியில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் ஏற்பட்டிருக்கும் உயரழுத்தம் காரணமாக, நிலப்பரப்பில் வாயுக்கள் வெளியேறுவதால் ஜோஷிமத் நகரமே பூமிக்குள் புதைபடும் அபாயம் நேரிட்டுள்ளது.

அங்கு வியாழக்கிழமை முதல், சாலைகள், வீட்டின் சுவர், கூரைகளில் பெரிய பெரிய விரிசல்கள் ஏற்பட்டு, தொடர்ந்து அந்த விரிசல்கள் விரிவடைந்துகொண்டே வருகின்றன. திடீரென தங்கள் வீடுகள் இப்படி விரிசலடைந்ததால், என்னசெய்வதென்று தெரியாமல் கலங்கிப் போயிருக்கிறார்கள் ஜோஷிமத் மக்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com