ஆளுநர் மீது சந்தேகம் எழுகிறது: அவைத் தலைவர் அப்பாவு

ஆளுநர் ஆர்.என். ரவி, உயர் பதவிக்கு ஆசைப்பட்டு இவ்வாறு நடந்து கொள்கிறாரோ என்று அவர் மீது சந்தேகம் எழுவதாக  பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
ஆளுநர் மீது சந்தேகம் எழுகிறது: அவைத் தலைவர் அப்பாவு
ஆளுநர் மீது சந்தேகம் எழுகிறது: அவைத் தலைவர் அப்பாவு

சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவி, உயர் பதவிக்கு ஆசைப்பட்டு இவ்வாறு நடந்து கொள்கிறாரோ என்று அவர் மீது சந்தேகம் எழுவதாக  பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த தமிழ்நாடு, திராவிட மாடல் உள்ளிட்ட பல வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிக்காமல் புறக்கணித்தார். தமிழ்நாடு அரசு என்ற இடத்தில் ஒரு சில இடங்களில் இந்த அரசு என்று மாற்றி வாசித்திருந்தார்.

இதனால், பேரவையில் இன்று கடும் சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவைத் தலைவர் அப்பாவு, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை அம்பேத்கர் பெயரையே ஆளுநர் வாசிக்காதது  வேதனை அளிக்கிறது.

ஆளுநர் பல பகுதிகளை விட்டும், சில பகுதிகைள சேர்த்தும் வாசித்துள்ளார். இந்த வகையில், சட்டப்பேரவயில் ஆளுநர் அநாகரீகமாக நடந்து கொண்டார்.

மத்திய அரசு தயாரித்த உரையையே நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் வாசிக்கிறார். பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

தேசிய கீதம் வாசிக்கப்பட்ட பிறகே அவையிலிருந்து ஆளுநர் வெளியேற வேண்டும் என்பது மரபு. தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே, பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியிருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் அவர் அவமதித்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்.

அரசியல் சட்டத்தைக் காக்க வேண்டிய ஆளுநர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்? என்று தெரியவில்லை என அப்பாவு கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com