

3 பைக்குகளில் 14 பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் பைக்குகளில் சிலர் சாகசப் பயணம் செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விடியோவில், 14 பேர் மூன்று பைக்குகளில் செல்கிறார்கள். ஒரு பைக்கில் ஆறு பேர் மற்றும் மற்ற இரு பைக்குகளில் தலா நான்கு பேர் செல்கிறார்கள். 14 பேர் ஆபத்தான முறையில் பைக்குகளில் பயனம் செய்தனர்.
இந்த சம்பவம் பரேலியின் தியோரானியா பகுதியில் நடந்துள்ளது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கி பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க: ’வாரிசு’ எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் பதில்!
"தகவல் கிடைத்ததும், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்று மூத்த பரேலி காவல்துறை அதிகாரி அகிலேஷ் குமார் சௌராசியா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.