ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானச் சேவைகளும் ரத்து

மோசமான வானிலை காரணமாக, ஸ்ரீநகரில் உள்ள அனைத்து விமானங்களும் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் ட்விட்டரில் தெரிவித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மோசமான வானிலை காரணமாக, ஸ்ரீநகரில் உள்ள அனைத்து விமானங்களும் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் ட்விட்டரில் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா, தில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், பிகாா் உள்ளிட்ட வட மாநிலங்களில் அடா்த்தியான மற்றும் மிகவும் அடா்த்தியான மூடுபனி நிலவி வருகிறது. இதன் காரணமாக ரயில் மற்றும் விமானச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடா் பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக, ஸ்ரீநகரில் உள்ள அனைத்து விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் விமான பயணிகள் குறிப்பிட்ட தேதியில் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து ஸ்ரீநகர் விமான நிலையம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தொடர்ச்சியான மோசமான வானிலை காரணமாக எங்கள் விமான நிலையத்தில் இன்றைய அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ரத்துசெய்யப்பட்ட விமானங்களின் பயணிகளை அந்தந்த ஏர்லைன்ஸ் கூடுதல் கட்டணமின்றி அடுத்த கிடைக்கும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவர்". இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com