தடைசெய்யப்பட்ட பகுதிகளை படம் எடுத்த தனியார் நிறுவன விமானி கைது

ராஜஸ்தானின் உத்தர்லால் விமானப் படைத் தளத்தில், இந்திய விமானப் படையினரால் சில மணி நேரங்கள் தடுத்து வைக்கப்பட்டார்.
தடைசெய்யப்பட்ட பகுதிகளை படம் எடுத்த தனியார் நிறுவன விமானி கைது

புது தில்லி: விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிகளை புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தக் குற்றத்துக்காக, அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் வெளிநாட்டைச் சேர்ந்த விமானி, ராஜஸ்தானின் உத்தர்லால் விமானப் படைத் தளத்தில், இந்திய விமானப் படையினரால் சில மணி நேரங்கள் தடுத்து வைக்கப்பட்டார்.

அவர் அலையன்ஸ் ஏர் நிறுவனத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாக நிறுவனத்திடமிருந்து வந்த தகவல் தெரிவிக்கிறது.

இது குறித்து தனியார் விமான நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில், "அலையன்ஸ் ஏர் பாதுகாப்பை மிக முக்கியமானதாகக் கருதுகிறது மற்றும் இதுபோன்ற நிகழ்வுகளை அலையன்ஸ் ஏர் தீவிரமாக எடுத்துக் கொள்ளும்.. குற்றம்சாட்டப்பட்ட விமானி மீதான விசாரணைக்காக அவர் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். தேவையான அனைத்து  நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்" என்று அலையன்ஸ் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com