நாட்டில் புதிதாக 179 பேருக்கு கரோனா பாதிப்பு!
நாட்டில் ஒரு நாளில் புதிதாக 179 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,80,936 ஆக உள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
புது தில்லி: நாட்டில் ஒரு நாளில் புதிதாக 179 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,80,936 ஆக உள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
நாட்டில் புதிதாக 179 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,80,936 ஆக உள்ளது. அதே நேரத்தில் கேரளத்தில் தொற்று பாதித்த ஒருவர் நேற்று இறந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,726 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வழக்கு இறப்பு விகிதம் 1 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,417 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,47,983 ஆக பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,227 ஆகக் குறைந்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,20,16,78,543 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 52,577 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...