17,362 கார்களை திரும்பப் பெற்றது மாருதி சுஸுகி: காரணம்?
17,362 கார்களை திரும்பப் பெற்றது மாருதி சுஸுகி: காரணம்?

17,362 கார்களை திரும்பப் பெற்றது மாருதி சுஸுகி: காரணம்?

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, தனது 7 மாடல் கார்களில் 17,362 வாகனங்களை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Published on

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, தனது 7 மாடல் கார்களில் 17,362 வாகனங்களை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆல்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸோ, கிராண்ட் விதாரா உள்ளிட்ட ஏழு மாடல் கார்களின் காற்றுப் பைகளில் பழுது இருப்பதாகக் கூறி 17 ஆயிரம் கார்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் அனைத்தும் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 8 முதல் 2023ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.

இந்த கார்கள் திரும்பப் பெறப்பட்டு, அவற்றின் காற்றுப்பைகள் பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்பட்டால் கட்டணமில்லாமல் மாற்றித் தரப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com