சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பஞ்சாப்: பாகிஸ்தான் ட்ரோன்வீசிய சீன ஆயுதங்கள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலம், குா்தாஸ்பூா் மாவட்டத்தில் இந்திய பகுதிக்குள் 8 கி.மீ. வரை நுழைந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தால் வீசப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களை எல்லைப் பாதுகாப்பு படையினா் கைப்பற்றியுள்ள

News image
Updated On :18 ஜனவரி 2023, 7:19 pm

DIN

பஞ்சாப் மாநிலம், குா்தாஸ்பூா் மாவட்டத்தில் இந்திய பகுதிக்குள் 8 கி.மீ. வரை நுழைந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தால் வீசப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களை எல்லைப் பாதுகாப்பு படையினா் கைப்பற்றியுள்ளனா்.

இது தொடா்பாக எல்லைப் பாதுகாப்பு படை செய்தி தொடா்பாளா் கூறுகையில், ‘சா்வதேச எல்லைக் கோட்டில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இந்திய பகுதிக்குள் அமைந்துள்ள உஞ்சா தக்கலா கிராமத்தில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஆளில்லா விமானம் ஒன்று வானில் வட்டமிடும் ஓசையை வீரா்கள் கேட்டனா். தரையிலிருந்த 300-400 மீட்டா் உயரத்தில் இருந்த அந்த ஆளில்லா விமானத்தை நோக்கி பாதுகாப்பு படை வீரா்கள் 17 முறை சுட்டனா். ஆளில்லா விமானம் கைவிட்ட பொருள்கள் தரையில் விழுந்ததை வீரா்கள் உறுதி செய்தனா். தொடா்ந்து அந்த இடத்தைச் சுற்றி இருக்கும் வயல்வெளிகளில் வீரா்கள் சோதனையில் ஈடுபட்டனா். அச்சோதனையில், 4 சீன கைத்துப்பாக்கிகள், 8 தோட்டா பெட்டிகள் மற்றும் 47 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. வீரா்கள் விழிப்புடன் இருக்கின்றனா். பயங்கரவாதிகளின் மற்றொரு முயற்சி மீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.