பிறந்தநாள் பரிசால் மாட்டிக் கொண்ட திருடர்கள்: ரொம்ப காஸ்ட்லியான தவறு!

நாடு முழுக்க சுமார் 50 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டும் சாமர்த்தியமாக தப்பி வந்த திருடர்கள், நண்பருக்கு அளித்த பிறந்தநாள் பரிசால் மாட்டிக் கொண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திட்டமிட்டு, துல்லியமாக காய்நகர்த்தி, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள், மிகக் காஸ்ட்லியான தவறால் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

தானே மத்திய சிறைச்சாலையில் கொள்ளை, வழிப்பறி குற்றங்களுக்காக அடைக்கப்பட்ட லஷ்மண் - விஷ்ணு இருவரும் நண்பர்களாக மாறினர். சிறையிலிருந்து வெளியே வந்த இருவரும் கைகோர்த்துக் கொண்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டனர்.

பராமரிப்பு வேலைகள் நடந்து வரும் வீடுகளை குறி வைத்து இவர்கள் கொள்ளையடிப்பது வழக்கம். சாரங்கள் கட்டுவதற்காக வீடுகளில் ஏதேனும் ஒரு பாதுகாப்புக் குறைபாடு இருக்கும், அதனை அடிப்படையாக வைத்து, நள்ளிரவில் கருப்பு ஆடைகளை அணிந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்து பொருள்களை கொள்ளையடித்துவிடுவார்கள்.

சிசிடிவி கேமராக்களிலும் இவர்களது உருவங்களை அடையாளம் காண முடியாமல் காவல்துறையினர் திணறினர்.  இந்த நிலையில்தான், வீட்டில் இருந்து கொள்ளைபோன கைப்பேசி ஒன்றில் புதிய சிம் போடப்பட்டு பயன்படுத்தப்படுவதை காவல்துறையினர் கண்டறிந்தனர். அந்த எண்ணை வைத்திருப்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது, அவருக்கு கொள்ளையர்கள் பிறந்தநாள் பரிசாக இந்த கைப்பேசியை அளித்திருந்தது தெரிய வந்தது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும், ராஜஸ்தான் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com