
18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து அறிவித்துள்ளார்.
இதன்படி கேரளத்தில் உயர்கல்வி பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் அதிகபட்சமாக 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம்.
மேலும் மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். கல்லூரிகளில் கட்டாய வருகைப்பதிவு மாணவிகளுக்கு மட்டும் 75% லிருந்து 73% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் பிந்து தெரிவித்தார்.
மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் மன மற்றும் உடல் ரீதியான சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கேரள அரசு மாநில உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது என்றார்.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டி: ஜி.கே.வாசன் சம்மதம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.