ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் மாா்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
முன்னதாக, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.
இதையடுத்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அதிமுக நிர்வாகிகள் குழு நேற்று சந்தித்துப் பேசியது. வேட்பாளர் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொண்டதாகவும் கூட்டணிக் கட்சிகளின் நலனை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து பாஜக விரைவில் கருத்து தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |

ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

