ஈரோடு இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் குழு சந்திப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அதிமுக நிர்வாகிகள் குழு சந்தித்து பேசி வருகிறது. 
ஈரோடு இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் குழு சந்திப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அதிமுக நிர்வாகிகள் குழு சந்தித்து பேசி வருகிறது. 

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தாா். இதையடுத்து, இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய தோ்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களுக்கு தோ்தல் அறிவிப்புகளை புதன்கிழமை வெளியிட்டபோது, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கும் இடைத்தோ்தலை அறிவித்தது. இத்தொகுதியில், ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப் பதிவு, மாா்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் விதிகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அதிமுக நிர்வாகிகள் குழு இன்று சந்தித்து பேசி வருகிறது. முன்னாள் அமைச்சர்ம் வளர்மதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஜி.கே.வாசனை சந்தித்துப் பேசி வருகின்றனர். 

ஏனெனில், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். 

தற்போது அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மோதல் உள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விண்ணப்பத்தில் இருவரும் சேர்ந்து கையெழுத்திட வேண்டும் என்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதனால் இதுகுறித்து பேசுவதற்காகவும் தேர்தல் பணிகள் தொடர்பாகவும் பேசுவதற்கு அதிமுக நிர்வாகிகள் குழு செல்லலாம் என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com