ஈரோடு தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் யார்? - ஓரிரு நாளில் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அதிமுக கூட்டணி சார்பில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். 
ஈரோடு தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் யார்? - ஓரிரு நாளில் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அதிமுக கூட்டணி சார்பில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு நேற்று(புதன்கிழமை) இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தன. அதன்படி இத்தொகுதியில், ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப் பதிவு, மாா்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அதிமுக நிர்வாகிகள் குழு இன்று சந்தித்து பேசியது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஜி.கே.வாசனை சந்தித்துப் பேசினர். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், 'தற்போதைய சூழ்நிலையில் இடைத்தேர்தல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இடைத்தேர்தலில் வெற்றியை உறுதி செய்துகொள்வது கூட்டணிக் கட்சிகளின் கடமை. நல்ல வியூகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இன்றைய ஆலோசனை நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகள் த.மா.கா. அலுவலகத்திற்கு வந்தது வரவேற்கத்தக்கது.அதிமுக - த.மா.கா. கட்சி இடையே சுமூக உறவு இருந்து வருகிறது. எங்களது இலக்கு தேர்தலில் கூட்டணி கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதே.இரு நாள்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன்.

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக அரசு உள்ளது. எனவே திமுகவுக்கு எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகின்றன. நாங்கள் ஆலோசித்து  ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அறிவிப்போம். தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்' என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கூட்டணி கட்சிகள் இணைந்து வேட்பாளரை முடிவு செய்தபின்னர் சின்னம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com