நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வடிவேலுவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று(புதன்கிழமை) இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
இதையும் படிக்க | நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்!
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், வடிவேலுவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் வடிவேலுவை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், 'நடிகர் வடிவேலுவின் அன்புத்தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
ஆளாக்கி அழகுபார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். 'வைகைப் புயல்' வடிவேலு மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனை இன்று சந்திக்கிறது அதிமுக குழு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.