மேகாலயா தேர்தல்: ஜன.24-ல் திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணமூல் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை ஜன.24ஆம் தேதி வெளியிடுகிறது. 
மேகாலயா தேர்தல்: ஜன.24-ல் திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணமூல் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை ஜன.24ஆம் தேதி வெளியிடுகிறது. 

திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27ஆம் தேதியும் ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது. அதேசமயம் தேர்தல் முடிவுகள் மார்ச் 2ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணமூல் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை ஜன.24ஆம் தேதி வெளியிட உள்ளது. இதுகுறித்து கொல்கத்தாவில் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய் பிரகாஷ் கூறுகையில், மேகாலயாவில் திரிணமூல் கட்சி சிறப்பாக செயல்படும். 

கட்சியின் தேர்தல் அறிக்கை ஜன.24ஆம் தேதி வெளியிடப்படும். மேகாலயாவில் பாஜகவின் நிலையும் அவ்வளவு வலுவாக இல்லை என்று தெரிவித்தார். தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மக்கள் கட்சி, வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் ஆட்சி செய்யும் ஒரே அரசியல் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com