தென் மாநிலங்களில் மேலும் 3 ‘வந்தே பாரத் ரயில்கள்’ விரைவில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தெலங்கானாவின் கட்ச்குடாவிலிருந்து கா்நாடகத்தின் பெங்களூரு வரையிலும், தெலங்கானாவில் உள்ள செகந்திராபாதிலிருந்து ஆந்திரத்தின் திருப்பதி மற்றும் மகாராஷ்டித்தின் புணே ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களின் புதிய சேவையை தொடங்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
பெங்களூரு வழியாக சென்னை-மைசூரூ இடையேயான தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பரில் தொடக்கி வைத்தாா்.
செகந்திராபாத்-விசாகப்பட்டினம் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை சமீபத்தில் தொடங்கியது. ரயில் சேவையின் தொடக்கம் முதல் 100 சதவீத இருக்கைகளும் பதிவு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழாண்டு இறுதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களையும், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 400-க்கும் அதிகமான வந்தே பாரத் ரயில்களையும் இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
நாட்டின் ‘அதிவேக ரயில்’ என்ற பெருமைக்குரிய வந்தே பாரத் ரயில் பெட்டிகள், சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) வடிவமைக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப் பந்த்தின் விக்கெட்தான் ஆட்டத்தின் திருப்புமுனை: பியூஸ் சாவ்லா

50 ஆண்டுகளுக்குப் பிறகு...! மீண்டும் நிலவு பயணம்! | NASA | The Artemis II mission | Moon
அனுமன் ஜெயந்தி வழிபாடுகளும் கொண்டாட்டங்களும்!

அடுத்த 2 வாரத்திற்குள்...? எச்சரித்த ட்ரம்ப் | Trump in address to nation on Iran war | USA | Washington
வீடியோக்கள்

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

