தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த்தின் விக்கெட்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நேற்று (ஏப்ரல் 1) நடைபெற்ற போட்டிட்யில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த்தின் விக்கெட்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

பியூஸ் சாவ்லா - படம் | AP
இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னைப் பொருத்தவரை ரிஷப் பந்த் பவர்பிளேவில் ரன் அவுட்டானதுதான் தில்லி கேபிடல்ஸுக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அவர்களது அணிகளுக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுப்பது மிகவும் முக்கியம். லக்னௌ அணியில் புதிதாக மிட்செல் மார்ஷுடன் தொடக்க ஆட்டக்காரராக ரிஷப் பந்த் களமிறங்கியது நன்றாக இருந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 19 ரன்கள் சேர்த்தது.
மார்ஷ் அதிரடியாக விளையாடினார். ஆனால், ரிஷப் பந்த் ஆட்டமிழந்தவுடன் அடுத்து களமிறங்கிய வீரர்கள் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பியது மிட்செல் மார்ஷ் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. ரிஷப் பந்த்தின் ரன் அவுட் ஆட்டத்தின் திருப்பு முனையாக மாறியது என்றார்.
142 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணி, சமீர் ரிஸ்வியின் பொறுப்பான ஆட்டத்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ அணியை வீழ்த்தியது. சமீர் ரிஸ்வி 47 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Former Indian cricketer Piyush Chawla has stated that Rishabh Pant's wicket proved to be the turning point of the match against the Delhi Capitals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபாசமாகப் பேசிய ரிஷப் பந்த்..! சமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்கள்!

ரிஷப் பந்த் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: லக்னௌ பயிற்சியாளர்

ஆயுஷ் பதோனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது ஏன்? ரிஷப் பந்த் விளக்கம்!

எந்த ஒரு பேட்டிங் வரிசையும் ரஷித் கான் பந்துவீச்சில் தடுமாறும்: பியூஸ் சாவ்லா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு




