கோவை தனியார் பள்ளியில் தீ விபத்து! விடுமுறையால் தப்பிய மாணவர்கள்!போக்சோ வீரமணி வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும்! திமுக மனு‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி: பிரதமர் மோடி உறுதிஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷியா ஆதரவுசெஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம்நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்கள்: என்டிஏ அலுவலகத்துக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்புதமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

எந்த ஒரு பேட்டிங் வரிசையும் ரஷித் கான் பந்துவீச்சில் தடுமாறும்: பியூஸ் சாவ்லா

எந்த ஒரு பேட்டிங் வரிசையும் ரஷித் கான் பந்துவீச்சில் தடுமாறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

Rashid Khan dismisses Sameer Rizvi.

சமீர் ரிஸ்வியின் விக்கெட்டினை வீழ்த்திய ரஷித் கான் - படம் | குஜராத் டைட்டன்ஸ் (எக்ஸ்)

Published On :

எந்த ஒரு பேட்டிங் வரிசையும் ரஷித் கான் பந்துவீச்சில் தடுமாறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நேற்று (ஏப்ரல் 8) நடைபெற்ற போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரஷித் கான், 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நிதீஷ் ராணா, சமீர் ரிஸ்வி மற்றும் கேப்டன் அக்‌ஷர் படேல் விக்கெட்டினைக் கைப்பற்றி அசத்தினார் ரஷித் கான். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

பியூஸ் சாவ்லா

பியூஸ் சாவ்லா - படம் | AP

இந்த நிலையில், எந்த ஒரு பேட்டிங் வரிசையும் ரஷித் கான் பந்துவீச்சில் தடுமாறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரஷித் கான் சிறப்பாக பந்துவீசினால் அந்த போட்டி எப்படியிருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவரால் எந்த ஒரு பேட்டிங் வரிசைக்கும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அவர் முதல் பந்திலிருந்தே மிகவும் அற்புதமாக பந்துவீசினார்.

இளம் வீரர் சமீர் ரிஸ்வியை அவர் ஆட்டமிழக்கச் செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடக் கூடிய சமீர் ரிஸ்வியை முதல் பந்திலேயே ஆட்டமிழக்கச் செய்தார். மிகவும் அற்புதமாக பந்துவீசி சமீர் ரிஸ்வியின் விக்கெட்டினை அவர் வீழ்த்தினார் என்றார்.

Summary

Former Indian player Piyush Chawla has stated that any batting lineup would struggle against Rashid Khan's bowling.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.