ரிஷப் பந்த் மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாக லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றையப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம், லக்னௌ அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட குறைந்துவிட்டது.
இந்த நிலையில், ரிஷப் பந்த் மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாக லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: அதிக கோடிக்கு ரிஷப் பந்த் ஏலத்தில் எடுக்கப்பட்டதால், தான் சரியாக விளையாடவில்லை என்ற அழுத்தத்தில் அவர் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அணியின் கேப்டன் பொறுப்பு மிகவும் கடினமானது. அவர் அணிக்காக நிறைய அழுத்தங்களை எடுத்துக் கொள்கிறார். ஆனால், அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என அவர் கடுமையாக உழைக்கிறார் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Lucknow Super Giants head coach Justin Langer has stated that Rishabh Pant is under immense pressure.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌவுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஸ்பென்சர் ஜான்சன்!

ஆயுஷ் பதோனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது ஏன்? ரிஷப் பந்த் விளக்கம்!

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

ரிஷப் பந்த் பொறுப்புடன் விளையாட வேண்டும்: முகமது கைஃப்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை


