லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பொறுப்புடன் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நேற்று (ஏப்ரல் 9) நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த நிலையில், லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் போட்டி குறித்து விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், தொடர்ச்சியாக வெற்றிகள் பெற பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த் ஆட்டத்தின் இறுதி வரை விளையாடி அணிக்கு வெற்றி பெற்றுத் தர வேண்டும். அவர் அனுபவம் வாய்ந்த வீரர். கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அவர் களமிறங்கும்போது, லக்னௌ அணி பெரிதாக அழுத்தத்தில் இல்லை. முதல் 5 ஓவர்களில் லக்னௌ அணி 41 ரன்கள் எடுத்திருந்தது.
யாராவது ஒரு பேட்டர் ஆட்டத்தின் இறுதிவரை பொறுப்பாக விளையாடி அணிக்கு வெற்றி பெற்றுத் தர வேண்டும். அந்த பொறுப்பை கேப்டன் ரிஷப் பந்த் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கேப்டனாக நீங்கள் பொறுப்பாக விளையாடாவிட்டால், உங்களால் உங்களது அணிக்கு வெற்றி பெற்றுத் தர முடியாது. சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக ரிஷப் பந்த் நன்றாக விளையாடினார். ஆனால், அவர் தொடர்ச்சியாக அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும்.
போட்டி குறித்து விழிப்புணர்வை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.கேப்டனின் பொறுப்பு ஆட்டத்தின் இறுதி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றி பெற்றுத் தருவது. அந்த விஷயத்தில் ரிஷப் பந்த் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ரிஷப் பந்த் 9 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Former Indian cricketer Mohammad Kaif has stated that Lucknow Super Giants captain Rishabh Pant needs to play responsibly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப் பந்த்தின் விக்கெட்தான் ஆட்டத்தின் திருப்புமுனை: பியூஸ் சாவ்லா

தொடக்க வீரராக தொடர்வேனா? ரிஷப் பந்த் பேட்டி!

அணியை சிறப்பாக வழிநடத்தும் ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் பாராட்டு!

அழகின் ரகசியம் என்ன? - கத்ரீனா கைஃப்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


