மும்பை மாநகராட்சித் தேர்தல்: புதிய கூட்டணியை அறிவித்தது சிவ சேனை

மும்பை மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு, பிரகாஷ் அம்பேத்ரின் வஞ்சித் பகுஜன் அகாதியுடனான கூட்டணியை சிவ சேனை உறுதி செய்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மும்பை மாநகராட்சித் தேர்தல்: புதிய கூட்டணியை அறிவித்தது சிவ சேனை
மும்பை மாநகராட்சித் தேர்தல்: புதிய கூட்டணியை அறிவித்தது சிவ சேனை

மும்பை: மும்பை மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு, பிரகாஷ் அம்பேத்ரின் வஞ்சித் பகுஜன் அகாதியுடனான கூட்டணியை சிவ சேனை உறுதி செய்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

சிவ சேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பிரகாஷ் அம்பேத்கர் இணைந்து மும்பையில் இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, தனது தாத்தா மிகவும் பிரபலமாக அறியப்படும் பிரபோதங்கர் தாக்கரே என்ற கேஷவ் தாக்கரேவும், பிரகாஷ் அம்பேத்கரின் தாத்தாவும், சமூகத்தில் நன்கு அறியப்பட்டவரும், சட்டமேதையுமான பி.ஆர். அம்பேத்கரும் சமகாலத்தில் ஒருவர் மீது ஒருவர் மரியாதையோடு, சமூக நீதிக்காகவும், தீய பழக்கவழக்கங்களை எதிர்த்தும் போராடியவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது அரசியலில் பல தவறான பழக்கங்கள் உள்ளன. அவற்றை ஒழிக்கவும், இந்த இரு தலைவர்களின் வாரிசுகளும், நம்மைச் சுற்றியிருப்பவர்களும், நாட்டு மக்களும், நாட்டின் நலனுக்காக ஒன்றாக கைகோர்த்துள்ளோம். நாட்டில் ஜனநாயகம் உயிரோடு இருப்பதை உறுதி செய்ய நாங்கள் ஒன்றாக சேர்ந்துள்ளோம் என்று உத்தவ் தாக்கரே பேசினார்.

மகாராஷ்டிரத்திலும், மத்தியிலும் ஆளும் பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய உத்தவ் தாக்கரே, இந்த நாடு எதேச்சதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று பேசினார்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய பிரகாஷ் அம்பேத்கர், வஞ்சித் பகுஜன அகாதியும் சிவ சேனையும் இணைந்திருப்பது அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு சில மாதங்களாகவே, இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com