கழுத்தில் கடிகாரத்துடன் மேம்பாலத்திலிருந்து பணத்தை வீசிய நபர் (விடியோ)

கழுத்தில் கடிகாரத்துடன் மேம்பாலத்திலிருந்து பணத்தை வீசிய நபர் (விடியோ)

பெங்களூரு மாநகரின் கே.ஆர். சந்தை மேம்பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்தவர்களுக்கு திடீரென பணமழை பெய்ததைப் பார்த்து ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியடைந்தனர்.
Published on


பெங்களூரு; பெங்களூரு மாநகரின் கே.ஆர். சந்தை மேம்பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்தவர்களுக்கு திடீரென பணமழை பெய்ததைப் பார்த்து ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியடைந்தனர்.

மேம்பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த கோட் அணிந்திருந்த நபர், கழுத்தில் கடிகாரத்தை மாட்டியிருந்தார். கையில் ஒரு பை வைத்திருந்தார். அதில் கட்டுக்கட்டாக 10 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதனை மேம்பாலத்தின் கீழே வீசினார்.

பத்து ரூபாய் நோட்டுகளைப் பிடிக்க வாகன ஓட்டிகளும் சாலையில் நடந்து சென்றவர்களும் சாலை முழுக்க அங்கும் இங்கும் ஓடினர். இதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பையிலிருந்த பணம் முழுக்க காலியானதும் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். ஆனால், அதன் பிறகும் அப்பகுதியில் நெரிசல் சரியாகவில்லை.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், அந்த நபர் யார் என்று தெரியவில்லை என்றும், இந்த செயலுக்குப் பின்னணி என்ன என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com