இந்தியாவை கட்டமைப்பதில் பெண்களுக்கு பெரும்பங்கு: திரெளபதி முர்மு
நமக்கு அரசியல் சாசனத்தை வழங்கிய டாக்டர் அம்பேத்கருக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.


நமக்கு அரசியல் சாசனத்தை வழங்கிய டாக்டர் அம்பேத்கருக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குடியரசு நாளையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
குடியரசு நாளைக் கொண்டாடும் வேளையில் ஒரு நாடாக இணைந்து நாம் சாதித்தவற்றை நினைவுகூர வேண்டும். இந்திய வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் ககன்யான் திட்டம் விரைவில் நிறைவடையவுள்ளது. இது விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச்செல்லும் இந்தியாவின் முதல் விண்கலம்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல், பாலின சமத்துவம் ஆகியவை வெறும் கோஷங்கள் மட்டுமல்ல. கடந்த சில ஆண்டுகளாக நாம் அந்த சிந்தனைகளை நோக்கி சிறப்பாக முன்னேற்றி வருகிறோம். நாளைய இந்தியாவை கட்டமைப்பதில் பெண்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
நமக்கு அரசியல் சாசனத்தை வழங்கிய டாக்டர் அம்பேத்கருக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
உள்நாட்டிலேயே உற்பத்தி திட்டம் நாட்டு மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. நாட்டின் துறை சார்ந்த ஊக்கத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய குடிமகன் என்பதற்கு ஒவ்வொரும் பெருமைப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...