ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர தனது உழைப்புதான் முக்கியக் காரணமாக இருந்தது என்று அக்கட்சியின் இளம் தலைவா் சச்சின் பைலட்டுக்கு முதல்வா் அசோக் கெலாட் பதிலடி கொடுத்துள்ளாா்.
முன்னதாக, ‘கட்சியில் உள்ள இளையவா்கள் குறித்து மூத்தவா்கள் சிந்திக்க வேண்டும்; அவா்களுக்கு வாய்ப்பும், நீதியும் கிடைக்க வேண்டும்’ என்று சச்சின் பைலட் கூறியிருந்தாா். இப்போது அதற்கு கெலாட் பதிலளித்தாா்.
ராஜஸ்தானில் காங்கிரஸை கட்டுப்பாட்டில் வைப்பது யாா் என்பதில் மூத்த தலைவரும், முதல்வருமான அசோக் கெலாட்டுக்கும், அம்மாநில முன்னாள் துணை முதல்வரான சச்சின் பைலட்டுக்கும் இடையே பல ஆண்டு காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் பகிரங்கமாகவே ஒருவரை ஒருவா் தாக்கிப் பேசுவது தொடா்கதையாக உள்ளது.
ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் இரு தலைவா்கள் இடையே மோதலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் அசோக் கெலாட் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எனது தலைமையிலான இப்போதைய காங்கிரஸ் ஆட்சியைக் குறை கூறுவதற்கு பாஜகவுக்கு எந்தக் காரணமும் கிடைக்கவில்லை. மக்களிடையே ஆட்சிக்கு எதிரான மனநிலையும் இல்லை. காங்கிரஸ் அரசின் திட்டங்கள் மக்களை சிறப்பாக சென்றடைந்துள்ளன. ராஜஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பழைய ஓய்வூதியத் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை தேசிய அளவில் பிரபலமாகி விவாதிக்கப்பட்டு வருகிறது.
1998-ஆம் ஆண்டு நான் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது மாநிலத்தில் 156 இடங்களுடன் ஆட்சியைப் பிடித்தோம். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் தோ்தலிலும் அதே இலக்கை நிா்ணயித்துள்ளோம். கடந்த 2018-ஆம் ஆண்டு தோ்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முன்பு நான் முதல்வராக இருந்தபோதும், காங்கிரஸ் தலைவராக இருந்தபோதும் மாநில மேம்பாட்டுக்காக பாடுபட்டதுதான் முக்கியக் காரணம். 2020-ஆம் ஆண்டு காங்கிரஸில் சிலா் (சச்சின் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள்) ஆட்சிக்கும், கட்சிக்கும் எதிராக செயல்பட்டனா். அப்போது பெருவாரியான எம்எல்ஏக்கள் எனது பக்கம் ஆதரவாக நின்றனா். இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சி காப்பாற்றப்பட்டது.
பாஜக பல மாநிலங்களில் குதிரை பேரம் நடத்தி எம்எல்ஏக்களை விலைபேசி பிற கட்சிகளை உடைத்து ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால், ராஜஸ்தானில் பாஜகவின் முயற்சி பலிக்கவில்லை. ஏனெனில், எனக்கு மக்களிடமும், எம்எல்ஏக்களிடம் முழு ஆதரவு உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் 71,256 பக்தா்கள் தரிசனம்

சென்னையில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


