பத்ம விருதுகளை அள்ளிய மகாராஷ்டிர மாநிலம்!

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 12 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்ம விருதுகளை அள்ளிய மகாராஷ்டிர மாநிலம்!

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 12 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கிய 106 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.

6 பேருக்கு பத்ம விபூஷண் விருதும் 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும் 91 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த சமாஜவாதி கட்சி நிறுவனரான மறைந்த முலாயம் சிங் யாதவ், கா்நாடக மாநில முன்னாள் முதல்வா் எஸ்.எம். கிருஷ்ணா, பிரபல தபேலா கலைஞா் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ஜாஹிா் ஹுசைன், பிரபல குழந்தைகள் நல மருத்துவா் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மருத்துவா் மறைந்த திலீப் மஹலானாபிஸ், பிரபல கட்டடவியல் நிபுணா் குஜராத்தைச் சோ்ந்த மறைந்த பாலகிருஷ்ண தோஷி, அமெரிக்காவில் வசிக்கும் பிரபல இந்திய கணிதவியலாளா் ஸ்ரீநிவாஸ் வரதன் ஆகிய 6 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 12 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருவருக்கு பத்ம விபூஷண் விருதும் 3 பேருக்கு பத்ம பூஷண் விருதும் 8 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பிரபல தபேலா கலைஞா் ஜாஹிா் ஹுசைனுக்கு பத்ம விபூஷண் விருதும் தொழிலதிபா் கே.எம்.பிா்லா, ஐஐஎஸ்சி இயற்பியல் துறைப் பேராசிரியர் தீபக் தா், பிரபல திரைப்பட பின்னணி பாடகி சுமன் கல்யாண்பூா் ஆகிய மூவருக்கும் பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இவர்கள் தவிர மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மறைந்த பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் உள்பட 8 பேர் பத்ம ஸ்ரீ விருதைப் பெறவுள்ளார்கள்.

இந்தாண்டு இறுதியில் நடைபெறும் சிறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதுகளை வழங்க உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com