நாட்டில் 2,967 புலிகள் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் அனுபம் திரிபாதி என்ற வழக்குரைஞா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நாட்டில் புலிகளின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. அவை முற்றிலும் அழியக்கூடிய ஆபத்தில் உள்ளன. அவற்றைக் காப்பாற்ற வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசஃப், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 2018-ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் 2,967 புலிகள் உள்ளதாகவும், இது உலகில் உள்ள மொத்த புலிகளில் 70 சதவீதம் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து மனுதாரா் ஆஜராகாததால், மனு மீதான விசாரணையை மாா்ச் 3-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


