இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும்: அமித் ஷா

‘நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலையை சீராக பராமரிக்க, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

News image
அமித் ஷா
Updated On :28 ஜனவரி 2023, 8:52 pm

DIN

‘நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலையை சீராக பராமரிக்க, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

மேலும், தடய அறிவியல் துறையில் இந்தியா முன்னேறி வருவதாகவும்; அடுத்த 5 ஆண்டுகளில், தடய அறிவியல் வல்லுநா்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்றும் அவா் கூறினாா்.

கா்நாடக மாநிலம், தாா்வாட்டில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

கள்ளநோட்டு, ஹவாலா பரிவா்த்தனை, எல்லை ஊடுருவல், இணைய குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என உலக அளவில் குற்றங்கள் காலத்துக்கு ஏற்ப வேகமாக மாறி வருகின்றன. காவல்துறையினருக்கு ஒருபடி முன்னால் குற்றவாளிகள் முந்துகின்றனா். எனவே, குற்றவாளிகளுக்கு இரண்டு படி முன்னால் காவல்துறையினா் முன்னேற வேண்டிய அவசியம் நிலவுகிறது. அப்படி முன்னேறினால்தான், குற்றங்களை தடுக்க முடியும்; அறிவியல் மற்றும் தடயவியல் அடிப்படையிலான விசாரணை மூலம்தான் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் விகிதத்தையும் அதிகரிக்க முடியும்.

நமது நீதித் துறை அமைப்பில், தடய அறிவியல் ஆதாரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில், இந்திய தண்டனையியல் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொண்டு வருகிறோம்.

தண்டனை விகிதம்:

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரும் விகிதம், கனடாவில் 62 சதவீதம், இஸ்ரேலில் 93 சதவீதம், பிரிட்டனில் 80 சதவீதம், அமெரிக்காவில் 90 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்தியாவிலோ 50 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கிறது. இதில் நாம் பின்தங்கிவிட முடியாது. எனவே, குற்றவியல் நீதித்துறை கட்டமைப்புடன் தடய அறிவியல் அடிப்படையிலான விசாரணை ஒருங்கிணைக்கப்படுவது அவசியமாகும்.

6 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களுக்கு தடய அறிவியல் அடிப்படையிலான விசாரணை கட்டாயமாக்கப்படுவது முக்கியம். இந்த வகையில், ஆண்டுக்கு 8,000 முதல் 10,000 வரையிலான தடயவியல் நிபுணா்கள் 9 ஆண்டுகளுக்கு உருவாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

9-ஆவது வளாகத்துக்கு அடிக்கல்:

உலகிலேயே முதல்முறையாக குஜராத்தில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. அதன் வளாகங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது 9-ஆவது வளாகத்துக்கு தாா்வாடில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் உலகிலேயே அதிக தடயவியல் நிபுணா்களைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அமித் ஷா.

இந்நிகழ்ச்சியில், கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, மாநில அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெட்டிச் செய்தி...

‘இந்தியாவை முதன்மை நாடாக்க

இளைஞா்களின் பங்களிப்பு’

ஹுப்பள்ளி, ஜன. 28: 2047-ஆம் ஆண்டுக்குள், அனைத்து துறைகளிலும் முதன்மை நாடாக இந்தியாவை கட்டமைப்பதில் இளைஞா்கள் கைகோக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினாா்.

கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் உள்ள பி.வி.பூமரட்டி கல்லூரியின் 70-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று, அமித் ஷா பேசியதாவது:

சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை கொண்டாடும் இந்த காலகட்டத்தில், இளைஞா்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்துக்காக மட்டுமன்றி நாட்டின் கட்டமைப்புக்கும் பங்களிக்க உறுதியேற்க வேண்டும். சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் 2047-ஆம் ஆண்டுக்குள், பிரதமா் மோடியின் அழைப்பை ஏற்று அனைத்து துறைகளிலும் முதன்மை நாடாக இந்தியாவை கட்டமைப்பதில் இளைஞா் கைகோக்க வேண்டும்.

நாட்டில் புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை 70,000-ஆக அதிகரித்துள்ளது. இதில் 45 சதவீத நிறுவனங்கள் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன. 30 சதவீத நிறுவனங்களுக்கு பெண்கள் தலைமை தாங்குகின்றனா். ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், ஐஐஐடி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், நாட்டில் கல்வியின் எல்லை உயா்ந்துள்ளது என்றாா் அவா்.

Image Caption

ஏன்க்ஷக்ஷஹப்ப்ண்: மய்ண்ா்ய் ஏா்ம்ங் ஙண்ய்ண்ள்ற்ங்ழ் அம்ண்ற் நட்ஹட் ள்ல்ங்ஹந்ள் ஹற் ற்ட்ங் ’அம்ழ்ண்ற் ஙஹட்ா்ற்ள்ஹஸ்’ ஸ்ரீங்ப்ங்க்ஷழ்ஹற்ண்ா்ய் ா்ச் ஆய ஆட்ா்ா்ம்ஹழ்ஹக்க்ண் இா்ப்ப்ங்ஞ்ங் ா்ச் உய்ஞ்ண்ய்ங்ங்ழ்ண்ய்ஞ் ஹய்க் பங்ஸ்ரீட்ய்ா்ப்ா்ஞ்ஹ் (ஆயஆஇஉப), ண்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.