பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

நாடாளுமன்றம் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

நாடாளுமன்றத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து புறப்பட்டார்.

நாடாளுமன்றம் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Published On :

புது தில்லி: குடியரசுத் தலைவரின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கவிருக்கிறது. நாடாளுமன்றத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து புறப்பட்டார்.

குதிரைப்படைச் சூழ குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.

மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை (பிப். 1) தாக்கல் செய்கிறாா்.

நடப்பாண்டில் 9 மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தலும், அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்குகிறது. 

ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றுவது வழக்கம். அதன்படி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றவிருக்கிறார்.

அதையடுத்து நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பெரிதும் எதிா்பாா்க்கப்படும் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுநேர பட்ஜெட்டாக இது இருக்கும். அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே மத்திய அரசு அடுத்த ஆண்டில் தாக்கல் செய்யும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.