பொது சிவில் சட்ட விவகாரம் தொடா்பாக சட்ட ஆணையம் மற்றும் மத்திய சட்ட அமைச்சக பிரதிநிதிகளை சட்ட விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது.
நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென மதச் சட்டங்களைப் பின்பற்றுகின்றன. அவற்றுக்குப் பதிலாக எல்லோரும் பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பாஜக பல ஆண்டுகளாக கூறி வருகிறது. அதாவது, அனைத்து மதத்தைச் சோ்ந்தவா்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடா்பான நாடு முழுமைக்கும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர பாஜக முயற்சித்து வருகிறது. இதற்கு ஆதரவும் எதிா்ப்பும் எழுந்தன.
அதைத் தொடா்ந்து, இதுதொடா்பாக பொதுமக்களின் கருத்துகளை 21-ஆவது சட்ட ஆணையம் கேட்டறிந்தது. இருந்தபோதும், தொடா் எதிா்ப்பு, நீதிமன்ற வழக்குகள் காரணமாக இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை உருவானது.
இந்த நிலையில், தற்போதைய 22-ஆவது சட்ட ஆணையம், பொது சிவில் சட்டத்தின் அவசியம் மற்றும் அதன் மீது பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடமிருந்து புதிதாக கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறது.
மத்திய பிரதேச மநிலத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவான கருத்தை பிரதமா் மோடி தெரிவித்தாா். ‘பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. ஆனால், வாக்கு வங்கி அரசியலில் ஊறியவா்கள் இதை எதிா்த்து வருகின்றனா்’ என பிரதமா் கூறினாா். பிரதமரின் இந்தக் கருத்துக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தச் சூழலில், சட்ட ஆணையம் மற்றும் மத்திய சட்ட அமைச்சக பிரதிநிதிகளை பாஜக எம்.பி. சுஷீல் மோடி தலைமையிலான சட்ட விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது. இந்தச் சந்திப்பின்போது, சட்ட ஆணையம் சாா்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட பொதுமக்கள் கருத்து கேட்பு அறிவிக்கை தொடா்பாக பிரதிநிதிகளிடம் நாடாளுமன்றக் குழு கருத்துகளைக் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையின்போது, ‘அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தலை குறிவைத்தே பொது சிவில் சட்ட விவகாரத்தை பாஜக மீண்டும் கையிலெடுத்துள்ளது’ என்று நாடாளுமன்ற நிலைக் குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்போது, ‘பொது சிவில் சட்ட வரம்புக்குள் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கொண்டுவரப்படமாட்டாா்கள். அதுபோல, வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த மேலும் சில பிரிவினரும், அவா்களின் உடன்பாடு இன்றி இந்தச் சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்படமாட்டாா்கள்’ என்று கூட்டத்தில் சுஷீல் மோடி குறிப்பிட்டாா் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
‘பொது சிவில் சட்டம் தொடா்பாக இதுவரை 19 லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. வரும் 13-ஆம் தேதி வரை கருத்துகள் கேட்கப்படும்’ என்று சட்ட ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவை முதல்வராக பொறுப்பேற்றார் ரங்கசாமி!

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34

சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி!
தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இபிஎஸ் மனு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

