எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு நடைபெறும்: கே.சி.தியாகி 

ஜூலை 13 முதல் 14 வரை நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு நடைபெறும் என நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் கே.சி.தியாகி தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு நடைபெறும்: கே.சி.தியாகி 


பாட்னா: ஜூலை 13 முதல் 14 வரை நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு நடைபெறும் என நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் கே.சி.தியாகி தெரிவித்தார்.

பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரணியில் திரட்டும் முயற்சியை பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் அன்மையில் முன்னெடுத்தார். 

இதையொட்டி, முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டத்தை, பாட்னாவில் கடந்த மாதம் 23 மாதம் நடத்தினார். 

கூட்டத்துக்கு பின்னர், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஒன்றிணைந்து எதிர்க்க 17 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, நெகிழ்வுத்தன்மையுடன் பணியாற்ற அந்த கட்சிகள் தீர்மானித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் திட்டத்துக்கு இறுதிவடிவம் அளிக்க அடுத்தகட்ட கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என தெரிவித்தனர். பின்னர், சிம்லாவில் தொடர்ந்து மழை பெருவதால் பெங்களூருவில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்தார். 

இந்தநிலையில் பெங்களூருவில் ஜூலை 13 முதல் 14 வரை நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார். 
 
பிகார் பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 10 முதல் 24 வரை நடைபெற உள்ளது. இதையடுத்து கூட்டத்தை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கேட்டுக் கொண்டது.

இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி சனிக்கிழமை (ஜூலை 1) தெரிவித்தார்.

பிகார், கர்நாடக பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அறிவிப்பு போன்றவையே எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com