தில்லி கலால் கொள்கை வழக்கு: சிசோடியாவுக்கு ஜாமீன் மறுப்பு!

கலால் கொள்கை ஊழல் தொடா்பாக சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
தில்லி கலால் கொள்கை வழக்கு: சிசோடியாவுக்கு ஜாமீன் மறுப்பு!

கலால் கொள்கை ஊழல் தொடா்பாக சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சிசோடியாவின் ஜாமீன் கோரும் மனுவை நீதிபதி தினேஷ் குமாா் சா்மா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

சிசோடியாவைத் தவிர, தொழிலதிபர்கள் அபிஷேக் போயன்பல்லி, பெனாய் பாபு மற்றும் விஜய் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

மனுதாரா் மீது கடுமையான முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளதாலும், அவா் செல்வாக்கு மிக்கவா் என்பதாலும் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது. வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும்போது, மனுதாரருக்கு ஜாமீன் பெறுவதற்கு உரிமை இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக, மே 30-ம் தேதி சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இன்று(ஜூலை 03) மீண்டும் ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com