அமர்நாத்: மூன்றாவது நாளில் 17 ஆயிரம் பேர் தரிசனம்!

அமர்நாத் யாத்திரையில் தொடங்கி மூன்றாவது நாள்களில் 17 ஆயிரம் பேர் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர். 
அமர்நாத் குகை கோவிலுக்கு வரும்  யாத்ரீகர்கள்.
அமர்நாத் குகை கோவிலுக்கு வரும் யாத்ரீகர்கள்.

அமர்நாத் யாத்திரையில் தொடங்கி மூன்றாவது நாள்களில் 17 ஆயிரம் பேர் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர். 

காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத்  யாத்திரை இந்தாண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி நிகழ உள்ளது. இந்நிலையில், மூன்றாவது நாளில் மட்டும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குகைக் கோயிலுக்குச் சென்றுள்ளனர். 

4,975 ஆண்கள், 1,429 பெண்கள், 33 குழந்தைகள், 151 சாதுக்கள் மற்றும் சாத்விகள் 9 பேர் என 6,597 பேர் அடங்கிய மற்றொரு குழு பகவதி நகரிலிருந்து இன்று புறப்பட்டுச் சென்றது. 

அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக பஹல்காம் மற்றும் பால்டால் வழித்தடத்தில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com