பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நாம் பல்வேறு மொழிகளை பேசுபவர்களாக இருந்தாலும், கலாசாரம் பண்பாட்டை பொறுத்தவரை அனைவரும் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். அந்த வகையில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக காசி தமிழ் சங்கமம், செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு சிறப்பாக நடத்தியுள்ளது. தமிழின் பெருமையை நாடு முழுவதும் எடுத்துச் செல்வதற்கு இந்த நிகழ்ச்சிகள் பேருதவி புரிந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பாலும் ஹிந்தி மொழி பேசப்படுகிறது. உள்ளூர் மொழிகளும் உள்ளன. காசி தமிழ் சங்கமம் மற்றும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியைப் போல ஜார்க்கண்ட் மாநிலத்துடன் தமிழ்நாடு இணைந்து நிகழ்ச்சி நடத்த எதிர்காலத்தில் திட்டமிடப்படும். தமிழகமும் ஜார்க்கண்ட் மாநிலமும் இணைந்து வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் என்னுடைய கவனம் இருக்கிறது. மருத்துவம், தொழில்துறை மின்சாரத்துறை உள்ளிட்ட பலதுறைகளிலும் இருமாநில ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்படும். அதற்கான செயல்வடிவங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் போக்கு நிலவுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த, ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், "அரசின் அணுகுமுறையும் அனுசரணையும் ஒரேமாதிரி இருக்க வேண்டும். அப்படி இருக்கிறபோது ஆளுநரின் அணுகுமுறையும் அதை சார்ந்ததாக மாறும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கின்றன. அரசும் மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அப்போது ஆளுநரின் அணுகுமுறையும் மக்கள் நலன் சார்ந்தே அமையும்.