தில்லியில் ஓரிரு நாள்களுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்கலாம்: கேஜரிவால்

தில்லியில் ஓரிரு நாட்களுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்கலாம் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 
தில்லியில் ஓரிரு நாள்களுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்கலாம்: கேஜரிவால்

தில்லியில் ஓரிரு நாட்களுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்கலாம் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 

குறிப்பாக தில்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தில்லியின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து ஏற்பட்டுள்ளது. பல இடங்கள், சாலைகள், பாலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன.

ஏற்கெனவே யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தில்லி அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்ட வஜிராபாத் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று காலை பார்வையிட்ட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

'தில்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் முதல்முறையாக இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பம்புகள், இயந்திரங்களில் தண்ணீர் புகுந்ததால் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தில்லியில் 25% நீர் விநியோகம் குறையும். ஆழ்குழாய்க் கிணறுகளும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக தில்லியில் ஓரிரு நாட்களுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்கலாம். நாளை மாலைக்குள் தண்ணீர் விநியோகம் மீண்டும் தொடங்கும் என நம்புகிறேன். பொதுப்பணித்துறை கணிப்பின்படி இன்று மாலை 3-4 மணிக்கு யமுனை ஆற்றின் நீர்மட்டம் உச்சத்தை அடையும். அதன்பின்னர் குறையத் துவங்கும்' என்றார். 

மேலும், 'அத்தியாவசியம் இல்லை என்றால் மக்கள் வெளியே வர வேண்டாம். அலுவலக வேலைகளை வீட்டிலிருந்து செய்ய முயற்சி செய்யுங்கள். 
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது' என்றும் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com