
ஹிமாசலத்தில் கனமழை காரணமாக குலு மணாலிக்கு சுற்றுலாவுக்கு வந்த 7 பேரில் 4 பேர் பலியாகியுள்ளனர். மூவர் மாயமாகியுள்ளனர்.
வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி, உத்தரகண்ட், உ.பி., ம.பி, தில்லி ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹிமாசலில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்துவருகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த 7 இளைஞர்கள் குலு மணாலிக்கு சுற்றுலா வந்துள்ள நிலையில், கனமழையில் சிக்கி 4 இளைஞர்கள் பலியாகியுள்ளதாகவும், மூன்று பேர் மாயமாகியுள்ளதாகவும் ஹிமாச்சல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்களின் குடும்பங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் உடல்களை சேகரிக்க விரைந்தனர்.
இறந்தவர்கள் சாஹில் தேஜி, லால்ச் சந்த் துல்காச், நரேந்திர சிங் மற்றும் சைத்யா சங்க்லா என அடையாளம் காணப்பட்டனர். மேலும், நரேந்திர, நிதேஷ் மற்றும் சந்தீப் காணவில்லை. காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.