ஒவ்வொரு ஆண்டும் பாம்புக் கடியால் இத்தனை உயிரிழப்புகளா?

மழைக் காலத்தில் பாம்பு கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால்  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் பாம்பு கடி குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த முடிவு.
ஒவ்வொரு ஆண்டும் பாம்புக் கடியால் இத்தனை உயிரிழப்புகளா?

மழைக் காலத்தில் பாம்புக் கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால்  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் பாம்பு கடி குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாம்பு கடிக்கு முதலுதவி செய்வது குறித்த புத்தகம்  ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாம்பு கடி குறித்த கல்வி விழிப்புணர்வு புத்தகங்கள் மற்ற மாநிலங்களில் மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக பாம்பு கடியால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களுக்கு இந்தப் புத்தகம் வழங்கப்பட உள்ளது. இந்த புத்தகங்கள் சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் மற்ற மருத்துவ சேவை மையங்களுக்கும் வழங்கப்பட உள்ளதால் பாம்பு கடிக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும். இந்த முதலுதவி புத்தகத்தில் பாம்பு கடிக்கு எப்படி முதலுதவி அளிப்பது  என்பது தொடர்பான விவரங்கள் பட விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன. பாம்பு கடியின் அறிகுறிகள் குறித்தும், பாம்புக் கடியில் இருந்து காத்துக் கொள்ளும் மருத்துவ முறைகளும் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இந்த முதலுதவி புத்தகம் குறித்து மருத்துவர் ஒருவர் கூறியதாவது: பாம்புக் கடியால் அதிக அளவில் உயிரிழப்புகளை சந்திக்கும் மாநிலங்களுக்கு இந்த முதலுதவி புத்தகம் மிக உதவியாக இருக்கும். இந்த புத்தகத்தின் மூலம் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிவிட முடியும். அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களும் இந்த முதலுதவி புத்தகத்தை பயன்படுத்தி பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும். அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் இந்த புத்தகம் வழங்கப்பட உள்ளது. ஏனெனில், அவர்கள் தான் பாதிக்கப்படுபவர்களை தொடர்பு கொள்ளும் முதல் நபர்கள். பலரும் பாம்புக் கடிக்கான மருத்துவ முறை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றார்.

மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத், ஆந்திரம் மற்றும் தெலங்கானா ஆகிய 8 மாநிலங்களில் இருந்து 2001 முதல் 2014 வரை 70 சதவிதத்துக்கும் அதிகமான  உயிரிழப்புகள் பாம்புக் கடியால் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் ஓராண்டில் சராசரியாக 58,000 ஆயிரம்  பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் அதிக  அளவிலான மக்கள் விவசாயம்  மற்றும் அதனைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளதால் பாம்புக் கடியால் பாதிக்கப்படுபவர்களின் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

இந்தியாவில் கடந்த 2000 முதல் 2019 வரை 12 லட்சம் பேர் பாம்புக் கடியால் உயிரிழந்துள்ளனர். சரசாரியாக ஆண்டு ஒன்றுக்கு 58 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பாம்புக் கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com