தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

முத்தக் காட்சியில் கஜோல்: ரசிகர்கள் வருத்தம்!

பிரபல பாலிவுட் நடிகை பல ஆண்டுகளுக்குப் பிறகு முத்தக் காட்சியில் நடித்துள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

Published On :

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைத்து நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றவை. தமிழில் நடிகர் பிரபு தேவா நடித்த ’மின்சார கனவு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பின், நடிகர் அஜய் தேவ்கனை மணந்து பாலிவுட் படங்களில் முழு கவனத்தைக் கொடுத்தார்.

Story image

தமிழில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி - 2 படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். 'தி ட்ரையல்' எனும் புதிய படத்திற்காக இன்ஸ்டாகிராம் பதிவுகளை அழித்து அவர் செய்த புரமோஷனை பலரும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. 

Story image

லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் நடித்துள்ளார். இதில் தமன்னா, கஜோல், மிருணாள் தாக்குர் என பலர் நடித்துள்ளனர். ஜூன் 29இல் நெட்பிளிக்ஸில் வெளியான இந்தப் படத்தில் படுக்கயறை காட்சிகளில் கஜோல் நடித்திருந்தார்.

தற்போது ஹாட்ஸ்டாரில் ஜூலை 14ஆம் நாள் வெளியான ‘தி ட்ரையல்’ எனும் இணையத் தொடரில் முத்தக் காட்சியில் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு 49 வயதில் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்துள்ளதால சமூக வலைதளங்களில் இது குறித்து பேசு பொருளாகியுள்ளார் கஜோல். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நீங்கள் இப்படி நடிப்பது அதிர்ச்சியாக உள்ளதென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Story image

இதற்கு முன்பாக ஷாருக்கானுடன் முத்தக் காட்சியில் நடித்திருந்தாலும் அது இந்த அளவுக்கு இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.