டிச.15-க்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடா்? தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு

26.11.1976: சென்னை நகரில் வரலாறு காணாத பெரு மழை - மீட்புப் பணியில் ராணுவம்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

26.11.1976 - Dinamani

Updated On :

சென்னை நகரில் வரலாறு காணாத மழை - பாதாள சாக்கடைகளில் தவறி விழுந்து 9 பேர் பலி

சென்னை, நவ. 25 - சென்னை நகரிலும் வடக்கு தமிழ்நாட்டிலும் புதன்கிழமையன்று இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவு பேய் மழை பெய்துள்ளது. சென்னை நகரில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 20 அங்குல மழை பெய்துள்ளது. சென்னை நகருக்கு ஏற்பட்ட புயல் அபாயம் நீங்கியது.

மழை காரணமாக நகரில் தாழ்வானப் பகுதிகளெல்லாம் வெள்ளக்காடாயின ஆயிரக் கணக்கான குடிசைவாசிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சென்னை நகரில் ஓடும் கூவம் ஆற்றில் உடைப்புகள் ஏற்பட்டு வெள் ளம் பெருகியது. வெள்ளத்தினால் சூழப்பட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பேர் மீட்கப் பட்டனர்.

புதன் கிழமையன்றும் வியாழனன்றும் நகரில் திறந்து கிடந்த பாதாள சாக்கடைகளில் விழுந்து 9 பேர் இறந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாறில் வெள்ளப் பெருக்கு எடுத்துள்ளது.

சென்னைக்குத் தண்ணீர் சப்ளை செய்யும் புழலேரி வழிந்தோடுகிறது. தண்ணீர் மற்ற நீர்த்தேக்கங்களுக்குத் திருப்பிவிடப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சில இடங்களில் பாலாறில் அபாய மட்டத்துக்கு மேல் 5 அடியில் தண்ணீர் ஓடுகிறது. ஆனால் மாவட்டத்தில் பயிர்கள் பாதிக்கப்படவில்லை.

அசாதாரணமானது

புதன்கிழமையன்று பெய்த பலத்த மழை "மிகவும் அசாதாரணமானது" என்று அரசு தலைமைச் செயலாளர் வி. கார்த்திகேயன் கூறினார். 1944-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் தடவையாக இப்போதுதான் இடைவிடாமல் மழை பெய்துள்ளது என்று நிருபர்களிடம் கூறினார்.

1944-ல் தாம் கிருஸ்துவக் கல்லூரியில் மாணவனாயிருந்த போது பெய்த பலத்த மழையை நினைவு கூர்ந்தார். அப்போது சில நாட்களுக்கு மின்சாரமே இல்லை என்றும், மெழுகுவர்த்திகளைக் கொண்டு சமாளித்ததாகவும் கூறினார்.

கவர்னர் விசாரித்தார்

தமிழ்நாட்டில் புயல் காரணமாக ஏற்பட்ட சேத விவரம், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகிய நிலவரங்களைத் தற்போது தமது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் இருக்கும் கவர்னர் சுகாதியா தொலைபேசியில் தலைமைச் செயலாளர் வி. கார்த்திகேயனோடு தொடர்பு கொண்டு அக்கறையோடு விசாரித்தார்.

சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ராணுவம்

சென்னை, நவம்பர் 25 - பேய் மழை பெருவெள்ளத்தின் காரணமாக வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிக்கு உதவும்படி ராணுவத்தினரின் உதவியைத் தமிழக அரசு கோரியதைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு, கேரளா பிராந்தியத் தளபதி பிரிகேடியர் மதன் மீட்புப் பணிக்குத் தேவையான படகுகள், மோட்டார் வாகனங்கள் எங்கு கிடைத்தாலும் அங்கிருந்து பெரும் முயற்சியை மேற்கொண்டார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தியில் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. அந்தப் பகுதி மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை மீட்பதற்காக செகந்திரபாத்திலிருந்து ஒரு விசேஷ ரயில் மூலம் ராணுவத்தினர் விரைந்திருக்கின்றார்கள்.

310 பேரை மீட்ட 10 வீரர்கள்

அண்ணா நகரில் வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் சிக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற முடியாமல் நாள் முழுவதும் அவதிக்குள்ளான 310 பேர்களை என்.சி.சி. பயிற்சி அலுவலாளர்கள் 10 பேர், பயிற்சிப் படகுகளை வைத்துக் கொண்டே மீட்டார்கள்.

இந்தப் பத்தே பேர் வெள்ளத்தில் சிக்கிய 310 பேரை மீட்டது ஒரு பெரும் சாதனையாகும். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறோம், மீட்க வாருங்கள் என்று தொலைபேசியில் வந்த அவசரச் செய்தியைக் கேட்டு என்.சி.சி. டைரக்டர் தளபதி கோபால் ராவ், உதவி டைரக்டர் நாயர், பிக்சிட் ஆகியவர்களும் சென்று இந்த மீட்பு பணியைச் செவ்வனே செய்து முடித்தார்கள். ...

Summary

26.11.1976: Unprecedented heavy rains in the city of Chennai – Army deployed for rescue operations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.