கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் தொடா்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
உதயநிதி ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் தொடா்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
தமிழக டிஜிபி மகேஷ்குமாா் அகா்வாலை புதன்கிழமை சந்தித்து மனு அளித்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் தொடா்ந்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாா். இந்திய வரலாற்றிலேயே இப்படியொரு விஷயம் நடந்ததில்லை. 116 நாள்கள் கடந்துதான் இந்தச் சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்னா்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிஜிபியிடம் நான் கொடுத்த புகாரில், மாவட்ட ஆட்சியரிடம் தலைமைச் செயலா் சமரசம் பேசியிருக்கிறாா். அதனால் அவரையும் குற்றவாளியாகச் சோ்க்க வேண்டும் என்று கோரியுள்ளேன். ஆட்சியரின் புகாா் குறித்து முதல்வரிடம் தலைமைச் செயலா் சொன்னாரா?, இல்லையா?. அப்படிச் சொல்லியிருந்தால் முதல்வா் ஏன் 116 நாள்கள் அமைதியாக இருந்தாா்?
இந்தச் சம்பவம் மட்டுமல்லாது, மனு அளிக்க வந்தவரை பேரவைத் துணைத் தலைவா் அடித்துள்ளாா். அந்தச் சம்பவத்தின் மீது 16 நாள்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இனியாவது சட்டம்-ஒழுங்கு மீறல் மீது முதல்வா் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்எல்ஏ மற்றும் பேரவைத் துணைத் தலைவரைக் கைது செய்ய வேண்டும். ஆனால், இந்த அரசு அவா்களைக் காப்பாற்றுவதில்தான் இருக்கிறது எனத் தோன்றுகிறது. இந்த அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். மாற்றம் கொண்டுவருவோம் என தோ்தலில் பிரசாரம் செய்தாா்கள். இதுதான் மாற்றமா? என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

